12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதங்களை தற்போது பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். வினாத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10 முதல் 21 வரை நடைபெற்றது. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு மே 7-ம் தேதி நடந்ததால் மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டு மே 8-ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில். 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
இதையும் படிங்க : TN 12th Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகளை ஓவர்டேக் செய்தார்களா மாணவர்கள்?
அதன்படி 8,03,385 தேர்வர்கள் தேர்வு எழுதியதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.03% ஆகும். மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவிகள் 4.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85% தேர்ச்சி சதவீதத்துடன் விருதநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதே நேரம் 86.69% தேர்ச்சி விகிதத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
அதிகம் தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 3 மாவட்டங்கள் :
விருதுநகர் - 97.85%
திருப்பூர் - 97.79%
பெரம்பலூர் -97.59%
மாவட்ட வாரியான தேர்ச்சி விவரம் :
கன்னியாகுமரி - 97.05%
திருநெல்வேலி - 96.61%
தென்காசி - 95.96%
தூத்துக்குடி - 97.36%
ராமநாதபுரம் - 96.30%
விருதுநகர் - 97.85%
தேனி - 93.17%
மதுரை - 95.84%
திண்டுக்கல் - 93.77%
ஊட்டி - 93.85%
திருப்பூர் - 97.79%
கோவை - 97.57%
ஈரோடு - 96.98%
சேலம் - 94.22%
நாமக்கல் - 96.94%
கிருஷ்ணகிரி - 86.69%
தர்மபுரி - 92.72%
புதுக்கோட்டை - 92.81%
கரூர் - 94.31%
அரியலூர் - 96.88%
பெரம்பலூர் - 97.59%
திருச்சி - 96.02%
நாகை - 90.68%
மயிலாடுதுறை - 90.15%
திருவாரூர் - 91.46%
தஞ்சாவூர் - 95.18%
விழுப்புரம் - 90.66%
கள்ளக்குறிச்சி - 91.06%
கடலூர் - 92.04%
திருவண்ணாமலை - 89.80%
வேலூர் - 89.20%
திருப்பத்தூர் - 91.13%
ராணிப்பேட்டை - 87.30%
காஞ்சிபுரம் - 90.82%
செங்கல்பட்டு - 92.52%
திருவள்ளூர் - 92.47%
சென்னை - 94.14%
காரைக்கால் - 88.57%
புதுச்சேரி - 93.45
இதையும் படிங்க : OPS Meet Sabareesan: சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது ஏன்? உண்மையை போட்டுடைத்த மகன் ஜெயபிரதீப்..!