
அங்கன்வாடி அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் 15 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி! மதுரை எம்.பி. சொன்ன மகிழ்ச்சியான செய்தி
விடுமுறை நாட்கள் மே 10ஆம் தேதி தொடங்குவதால் 15 நாட்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய ஊட்டச்சத்து பெட்டகம் மே 9ஆம் தேதியே வழங்கப்பட உள்ளது. 2 முதல் 6 வரை உள்ள குழந்தைகளுக்கு 750 கிராம் சத்துணவு கொடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. அங்கன்வாடி உதவியாளர்கள் மே 2வது வாரமும், முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள் 3வது வாரமும், குறு அங்கன்வாடி முதன்மை பணியாளர்கள் 4வது வாரம் உணவூட்டும் பணியை கவனித்துக்கொள்வார்கள் என ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குநர் பிறப்பித்துள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளது.
முன்பருவ கல்வி பெறும் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் கீழ், ஆண்டில் 300 நாட்களுக்கு சத்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 கிராம் சத்து மாவு, முட்டை, பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்டவை வழங்ககப்படுகின்றன.
பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்று டெலிவரி ஊழியர்களுடன் தோசை சாப்பிட்ட ராகுல் காந்தி!