தகுதியின் அடிப்படையில் மட்டுமே இனி பதவி உயர்வு... அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!!

By Narendran S  |  First Published Apr 18, 2023, 10:29 PM IST

தகுதியின் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தகுதியின் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் இருக்கும் 54 துறையிலும், தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதை அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசு உறுதி செய்து முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதையும் படிங்க: நளினி கிரேஸி மோகன் காலமானார்... துக்கம் பகிர்ந்து கொள்வதாக கமல்ஹாசன் டிவீட்!!

Tap to resize

Latest Videos

எனவே, 2023 மார்ச் 10ல் இருந்து தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 4,133 மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்... அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்!!

click me!