4,133 மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்... அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்!!

தமிழகத்தில் ரத்தத்தில் வரையப்படும் ஓவியங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் ரத்தத்தில் வரையப்படும் ஓவியங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இரண்டு முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் முதல் முறை சட்ட மசோதா நிறைவேற்றிய அனுப்பி வைத்திருந்ததை திருப்பி அனுப்பி வைத்தார். இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதா குறித்து கடந்த மாதம் அது குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கும் பதில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது வரையிலும் ஆளுநர் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்.

இதையும் படிங்க: வெயிலால் மயங்கி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்! ஓடிச்சென்று உதவிய பெண் காவலர்!

Latest Videos

ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை? சித்த மருத்துவ பல்கலை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள நிலையில், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரூ.40.05 கோடியில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 100 படுக்கை கொண்ட CCU BLOCK நிறுவப்படும். இதுபோல் நாமக்கல், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விருதுநகரில் 50 படுக்கை கொண்ட CCU BLOCK நிறுவப்படும். கிராமப்புற, நகர்புறங்களில் உள்ள 2286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் CCTV பொருத்தப்படும். காஞ்சிபுரத்தில் ரூ.230 கோடி மதிப்பில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். காஞ்சிபுரத்தில் அமைக்கப்படும் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்பட உள்ளது.

இதையும் படிங்க: புதுவையில் போட்டியாக கடைவைத்தர்வகளை மிரட்டிய பலூன் வியாபாரி!

நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பயிற்சி ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்படும். நெல்லை, சேலம், தஞ்சாவூர் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நவீன முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்படும். கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூ.146.52 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். 4,133 மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ரத்தத்தில் ஓவியம் வரையக்கூடிய புதிய கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஓவியங்களை வரைவதற்கு ரத்த ஓவிய கூடங்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.  

click me!