உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சென்னைச் சேர்ந்த 3 பேரின் உடலை சென்னை கொண்டுவருவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சென்னைச் சேர்ந்த 3 பேரின் உடலை சென்னை கொண்டுவருவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
உத்தரகாண்ட்டில் உள்ள பட்டா குப்த்காசியிலிருந்து நேற்று காலை ஹெலிகாப்டர் ஒன்று 7 பக்தர்களுடன் கேதார்நாத்துக்கு புறப்பட்டது. ஆனால் சாட்டி வனப்பகுதியில் பறந்தபோது, மோசான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
பில்கிஸ் பானு வழக்கு:குற்றவாளிகளை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு: அனுமதி கொடுத்த உள்துறை அமைச்சகம்
undefined
இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து கேதார்நாத் தாம் கோயிலில் இருந்து 2.கி.மீ தொலைவில் நடந்துள்ளது. இந்த விபத்தில் பலியான சென்னை தம்பதி உள்பட 3 பேர் குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பிரேம் குமார் வாஞ்சிநாதன்(63), அவரின் மனைவி சுஜாதா பிரேம்குமார்(56), மயிலாப்பூர் பாலகிருஷ்ணா தெருவைச் சேர்ந்த சுஜாதாவின் உறவினர் ஆர் கலை ரமேஷ்(60) ஆகியோர் உயிரிழந்தனர்.
பிரேம் குமார் மூத்த சகோதரர் ராம் குமார் “ கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பிரேம்குமார், சுஜாதா, கலை ஆகியோரின் உடல்களை கொண்டுவருவதற்கு தமிழக அரசு உதவ வேண்டும்” எனக் கோரிக்கை விடுந்திருந்தார்.
உத்தரகாண்டில் சோகம்கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது: 6 பேர் பலி
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “ உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த, பிரேம் குமார் வாஞ்சிநாதன்(63), அவரின் மனைவி சுஜாதா பிரேம்குமார்(56), ஆர் கலை ரமேஷ்(60)ஆகிய மூவரும் கேதார்நாத் சென்றிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து:ஓய்வுகால டூர் சென்னை தம்பதிக்கு நிரந்தர ஓய்வான சோகம்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை சென்னைக்கு விரைந்து கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து தமிழக அரசு செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.