உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சென்னை தம்பதி தங்களின் ஓய்வு காலத்தை அனுபவிக்க சென்ற சுற்றுலா, அதுவே அவர்களுக்கு நிரந்தர ஓய்வாக மாறிய சோகம் நடந்துள்ளது.
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சென்னை தம்பதி தங்களின் ஓய்வு காலத்தை அனுபவிக்க சென்ற சுற்றுலா, அதுவே அவர்களுக்கு நிரந்தர ஓய்வாக மாறிய சோகம் நடந்துள்ளது.
உத்தரகாண்ட்டில் உள்ள பட்டா குப்த்காசியிலிருந்து நேற்று காலை ஹெலிகாப்டர் ஒன்று 7 பக்தர்களுடன் கேதார்நாத்துக்கு புறப்பட்டது. ஆனால் சாட்டி வனப்பகுதியில் பறந்தபோது, மோசான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து கேதார்நாத் தாம் கோயிலில் இருந்து 2.கி.மீ தொலைவில் நடந்துள்ளது.
உத்தரகாண்டில் சோகம்கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது: 6 பேர் பலி
இந்த விபத்தில் பலியான சென்னை தம்பதி உள்பட 3 பேர் குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பிரேம்குமார்(63), அவரின் மனைவி சுஜாரா(56), மயிலாப்பூர் பாலகிருஷ்ணா தெருவைச் சேர்ந்த சுஜாதாவின் உறவினர் ஆர் கலை(60) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதில் கலையின் கணவர் ரமேஷ் ஹெலிகாப்டரில் இடம் இல்லாததால், வேறுவழியின்றி ஜீப் மூலம் குப்த்காசியிலிருந்து கேதார்நாத்துக்கு புறப்பட்டார். ஜீப்பில் சென்றதால் ரமேஷ் உயிர்தப்பினார். ஆனால் மலைப்பகுதியில் ஜீப் சென்றபோதே, தனது மனைவி, உறவினர்கள் இறந்த செய்தி ரமேஷுக்கு கிடைத்தபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
குஜராத், உத்தரகண்ட் மற்றும் உ.பி. செல்கிறார் பிரதமர் மோடி... வெளியானது முழு பயண விவரம்!!
இதில் பிரேம் குமார், சுஜாதா தம்பதி சென்னை, திருமங்கலம் பகுதியில் உள்ள சாந்தம் காலணியில் குடியிருந்தனர். கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பே சொந்தமாக வீடு வாங்கிய பிரேம்குமார், மாடியில் தானும், மனைவியும் குடியிருந்து கொண்டு தரைத்தளத்தில் சுஜாதாவின் 85, 89வயதான பெற்றோரை குடிவைத்தனர். பிரேம் குமார், சுஜாதா இருவரும் மிகுந்த பக்தியானவர்கள் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்
பிரேம் குமார் பீகாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகித்து சமீபத்தில் ஓய்வு பெற்று சென்னைக்கு வந்துவிட்டார். கலையின் கணவர் ரமேஷும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
பிரேம் குமார், சுஜாதா குறித்து அண்டைவீட்டார்கள் கூறுகையில் “ பிரேம் குமார், சுஜாதா தம்பதி மிகுந்த பக்தியானவர்கள். இருவருக்கும் பிரசாந்த் என்ற மகனும், காவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். மகன் சிங்கப்பூரில் நிரந்தரமாக குடியேறிவிட்டார், மகள் காவ்யா அமெரிக்காவில் திருமணமாகி செட்டிலாகிவிட்டார். ஆண்டுக்குஒருமுறை சிங்கப்பூர் சென்று மகனை பிரேம்குமார், சுஜாதா சந்தித்து வருவார்கள். காவ்யா ஆண்டுக்கு ஒருமுறை சென்னை வந்து பெற்றோரை சந்திப்பார். கொரோனா காலத்தில் பிரேம்குமார் தாய் இறந்துவிட்டார்.
இலங்கையில் அதிகரிக்கும் சீன ராணுவ நடமாட்டம்: அலறும் உளவுத்துறை! தமிழகஅரசு கலக்கம்
கொரோனா காலத்தில் தங்களின் குழந்தைகள் வெளிநாட்டில் படும் சிரமங்களை கூறி வருத்தப்பட்டனர். சுஜாதா அதிகமாக யாருடனும் பேசமாட்டார். கொரோனாவுக்குப்பின் தனது பேரக் குழந்தைகள், மகள்,மகனைப் பார்த்ததும் சுஜாதா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கேதார்நாத்துக்கு இருவரும் முதல்முறையாக செல்வதாக எங்களிடம் தெரிவித்திருந்தனர்” எனத் தெரிவித்தார்
பிரேம் குமார் மூத்த சகோதரர் ராம் குமார் கூறுகையில் “ கேதார் நாத்திலிருந்து பிரேம்குமார், சுஜாதா, கலை ஆகியோரின் உடல்களை கொண்டுவருவதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். இருவரின்மறைவு எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. சுஜாதா சமீபத்தில்தான் முழங்கால் மூட்டு அறுவைசிகிச்சை செய்தார். கலையும் நடப்பதில் சிரமப்படுவார்” எனத் தெரிவித்தார்.
ஓய்வு காலத்தில் முதல்முறையாக ஆன்மீகப் பயணம் சென்ற சென்னை தம்பதிக்கு இந்தபயணமே நிரந்தரஓய்வு தரும் பயணமாக மாறிவிட்டது