Diwali: மக்களே அலர்ட் !! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கெங்கு தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Oct 19, 2022, 10:21 AM IST
Highlights

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து நெரிசலைக்‌ கருத்தில்‌ கொண்டு அக்டோபர்‌ 21 முதல்‌ 23-ஆம்‌ தேதி வரை போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்படுகிறது. அதன்படி பூந்தமல்லி - கோயம்பேடு, பாடி - கோயம்பேடு, மாதவரம்‌ ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தீபாவளியை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக்‌ கருத்தில்‌ கொண்டு அக்டோபர்‌ 21 முதல்‌ 23-ஆம்‌ தேதி வரை போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்படுகிறது. அதன்படி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில்‌ பூந்தமல்லியில்‌ இருந்து கோயம்பேடு நோக்கி வரும்‌ கனரக வாகனங்கள்‌, இலகுரக சரக்கு வாகனங்கள்‌ மதுரவாயல்‌ புறவழிச்சாலை வழியாக அம்பத்தூர்‌ நோக்கி திருப்பி விடப்படும்‌.

மாதவரம்‌ ரவுண்டானா, மாதவரம்‌ மேம்பாலம்‌ வழியாக 100 அடி சாலைக்கு வரும்‌ கனரக சரக்கு வாகனங்கள்‌ ஜி.என்‌.டி சாலை, காவாங்கரை, செங்குன்றம்‌ வழியாக வெளிவட்ட சாலை வழியாக செல்ல வேண்டும்‌. 100 அடி சாலை பாடி மேம்பாலம்‌ வழியாக கோயம்பேடு நோக்கி வரும்‌ சரக்கு வாகனங்கள்‌ பாடி மேம்பால சந்திப்பில்‌ சி.டி.எச்‌ சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்‌.

மேலும் படிக்க:இந்திக்காரர்கள் மட்டும்தான் நாட்டின் குடிமக்களா? இந்திய நாடா..? இந்தியின் நாடா? பாஜகவிற்கு எதிராக சீறிய சீமான்

கோயம்பேடு மேம்பாலத்தில்‌ இருந்து 100 அடி சாலை நோக்கி வரும்‌ சரக்கு வாகனங்கள்‌, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈவெரா பெரியார்‌ சாலை வழியாக செல்ல வேண்டிய இடத்துக்குச்‌ செல்ல வேண்டும்‌. பூந்தமல்லி நெடுஞ்சாலையில்‌ கோயம்பேட்டை நோக்கி வரும்‌ சரக்கு வாகனங்கள்‌ நடுவங்கரை சந்திப்பு, நெல்சன்‌ மாணிக்கம்‌ சாலை மேம்பாலம்‌ வழியாக அண்ணா நகர்‌ 3, 2-ஆவது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர்‌ தொழிற்பேட்டை சாலை வழியாக மாற்றுப்பாதையில்‌ செல்ல வேண்டும்‌.

தாம்பரம்‌, பெருங்களத்தூர்‌ இடையே போக்குவரத்து நெரிசல்‌ அதிகமாக இருக்கும்‌ என எதிர்பார்க்கப்படுவதால்‌ தென்‌ மாவட்டங்களுக்கு செல்லும்‌ தனியார்‌ வாகன ஓட்டுநர்கள்‌ கிழக்கு கடற்கரைச்‌ சாலை, ராஜீவ்‌ காந்தி சாலையைப்‌ பயன்படுத்தி செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம்‌ வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையலாம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:KEDARNATH HELICOPTER CRASH:கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து:ஓய்வுகால டூர் சென்னை தம்பதிக்கு நிரந்தர ஓய்வான சோகம்

click me!