மாநில சுயாட்சியும்... கொள்கையில் மாறாத, மானமிகு கருணாநிதியும்..!! 

By Ajmal KhanFirst Published Aug 7, 2022, 7:22 AM IST
Highlights

இன்று வரை முதல்வர்கள் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி பெருமைகொள்கிறார்கள் என்றால் அதன் பின்னணியில் கருணாநிதி இருக்கிறார் என்பதை எவரும் மறந்துவிட முடியாது.அவர் அன்று எழுப்பிய உரிமை முழங்கிய அத்தனை மாநிலங்களுக்கும் சுய மரியாதையை பெற்றுத் தந்திருக்கிறது.


 

கலைஞரும் மாநில சுயாட்சியும்

இன்று ஒவ்வொரு மாநிலமும் எங்களுக்கு உரிமை இல்லை, மாநில அரசுகள் ஒன்றும் அடிமை இல்லை, என கூக்குரலிட்டு வரும் நிலையில் அன்றே  "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி"  என்ற  உரிமைக்குரல்  எழுப்பி  ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே மாநில சுயாட்சி என்ற கொள்கையின் பிதாமகனாக வாழ்ந்து மறைந்தவர் நமது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என்பது தமிழர்களாகிய நமக்கு பெருமையே. பேசியது மட்டும் அல்லாது அதற்கு குழு அமைத்து மத்திய அரசிடம் அறிக்கை வழங்கியவரும் அவரே.  

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வி பொருளாதாரம் வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு என தன்னிகரற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றால் அதற்கு பின்னால் 50 ஆண்டுகால திராவிட அரசியலும், அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை உள்வாங்கிய, தொலை நோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் நம் தமிழ் நாட்டிற்கு வாய்த்ததே காரணம்  என்பதை எவரும் மறுத்துவிட முடியாது

இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம், எல்லோருக்கும் எல்லாம், கல்வி, வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு என்ற சித்தாந்தம் கொண்ட மாந்தநேயம் மிக்கது திராவிட இயக்கம். காங்கிரஸில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டு, அண்ணா, கருணாநிதி, அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், போன்ற தலைவர்களை கொண்டு திராவிடத்திற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் அதுதான் இன்று திமுக அதிமுக என ஆலவிருட்டமாக ஓங்கி வளர்ந்து நிற்கிறது. 

காங்கிரஸை வீழ்த்தி திமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன், தமிழ்நாடு என பெயர் சூட்டி  தமிழ்நாட்டின் திராவிட இயக்க அரசியலுக்கு அடித்தளமிட்டவர் பேரறிஞர் அண்ணா, அவரது மறைவுக்குப் பின்னர் திமுக என்ற மாபெரும் இயக்கத்தை தலைமையேற்று நடத்தும் பெரும் சுமை 45 வயதில் கருணாநிதிக்கு நேர்ந்தது. 50 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கட்சியின் தலைவர், 62 ஆண்டுகள் சட்டமன்றப் பணிகள், 5 முறை தமிழக முதலமைச்சர், 13 முறை தோல்விக்காணாத சட்டமன்ற உறுப்பினர் என உலகம் வியக்கும் ஆற்றல் மிக்கவராக, அரசியல் திசைவழிப் போக்கில் தன்னை வரலாறாய் மாற்றிக் கொண்டவர் கருணாநிதி.

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. திமுக, விசிகவின் கைக்கூலி காவல்துறையா ? கொந்தளித்த எச்.ராஜா !

மாநில சுயாட்சி.. 

1969இல் முதலமைச்சர் ஆனவுடன் பெரியார் அண்ணா பேசிய சுயமரியாதை தன்மானத்தை உள்வாங்கிய கருணாநிதி முதன்முதலில் மாநில சுயாட்சியை உறுதிசெய்யவே முற்பட்டார், நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, ஆக்குழு ஆய்வு செய்து தந்த பரிந்துரைகளை 1973 சட்டமன்றத்தைக் கூட்டி மாநில சுயாட்சி  தீர்மானமாக நிறைவேற்றினார். பின்னர் அதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்து மாநில உரிமைகளுக்காக முழங்கினார்.

அவர் செய்த முக்கிய அளப்பரிய சாதனைகளில் முதற்பணி மாநில சுயாட்சி தீர்மானம்தான். இன்று மாநிலங்களுக்கு உரிமை தேவை மாநிலங்கள் ஒன்றும் மத்தியரசின் அடிமைகள் அல்ல என்று இப்போது பேசும் மாநிலங்களுக்கு மத்தியில் 40 ஆண்டுகளுக்கு முன்பே அதைப் பேசிவிட்டுச் சென்றவர் நம்  முன்னாள் முதல்வர் கருணாநிதி. 

தைரியம் இருந்தால் இதற்கு போராட்டம் நடத்துங்க.. அண்ணாமலைக்கு சவால்விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி !

முதல்வர்களுக்கே முதல்வன் கருணாநிதி..

அதன் தொடர்ச்சியாகத்தான் அன்று மத்திய அரசிடம் அவர் போராடி மாநில முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தார். சுதந்திர தினமாக இருந்தாலும் சரி குடியரசு தினமாக இருந்தாலும் சரி மாநில ஆளுநர்களே தேசிய கொடியை ஏற்றிவைக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர், பிரதமரும் ஜனாதிபதியும் கொடி ஏற்றி வைக்கும் உரிமையை பெற்றிருக்கும் போது, மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர்கள் ஏன் தேசிய கொடி ஏற்றும் உரிமை பெறக்கூடாது என்று சுயமரியாதையின் குரலை உயர்த்தினார் கருணாநிதி.

அதன் விளைவாக 1972ஆம் ஆண்டு நாட்டின் சுதந்திர தின வெள்ளி விழாவையொட்டி, நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினவிழா அன்று அந்தந்த மாநில முதல்வர்களே தலைமைச் செயலகத்தில் கொடியேற்றலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

முதல்வரின் முதல்வர்

சுயமரியாதை சுடர் பெரியார் நிழலில் வளர்ந்த கருணாநிதி வைத்த ஒற்றை கோரிக்கை நாடு முழுவதும்  அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கொடியேற்றி வைக்கும் உரிமை பெற்றுத் தந்தது. இன்று வரை முதல்வர்கள் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி பெருமைகொள்கிறார்கள் என்றால் அதன் பின்னணியில் கருணாநிதி இருக்கிறார் என்பதை எவரும் மறந்துவிட முடியாது.அவர் அன்று எழுப்பிய உரிமை முழக்கம் அத்தனை மாநிலங்களுக்கும் சுய மரியாதையை பெற்றுத் தந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதனால்தான் அவர் முதல்வர்களின் முதல்வர் என்று போற்றப்படுகிறார். 

இதையும் படியுங்கள்

“பிரதமர் சொல்லிவிட்டார்.. வேறு வழியில்லை என்று செய்கிறார்கள்” முதல்வர் ஸ்டாலினை சீண்டிய வானதி !
 

click me!