மகிழ்ச்சி செய்தி !! ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே சிறப்பு இரயில்.. எப்போது இருந்து..? ரயில்வே அறிவிப்பு

By Thanalakshmi V  |  First Published Aug 6, 2022, 5:36 PM IST

ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
 


ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் ஹூப்ளியில் இருந்து ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பர் 24 வரை இயக்கப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு ஹூப்ளியிலிருந்து புறப்படும் இரயில், மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:அலர்ட் மக்களே..!! இன்று 5 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் மழை.. வானிலை அப்டேட்..

Tap to resize

Latest Videos

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07354) ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 25 வரை இயக்கப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்படும் இரயில், மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட்!! தவறவிடாதீர்கள்.. குரூப் 1 மற்றும் 2 தேர்விற்கு இலவச பயிற்சி முகாம்.. முழு விவரம்

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:குட் நியூஸ்!! கட்டணமில்லா பயணம்.. இனி கவலை இல்லை.. பெண்களுக்கு நலன் கருதி “பிங்க் நிற பேருந்து”..

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், யெஸ்வந்த்பூர் (பெங்களூர்), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
 

click me!