அலர்ட் மக்களே..!! இன்று 5 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் மழை.. வானிலை அப்டேட்..

Published : Aug 06, 2022, 03:01 PM IST
அலர்ட் மக்களே..!! இன்று 5 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் மழை.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

நீலகிரி, கோவை‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ இன்று ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசைக்காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

06.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல்‌, தென்காசி, தேனி, வட தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி,
கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல்‌, தென்காசி, தேனி, வட தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

08.08.2022. கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல்‌, தென்காசி, தேனி, வட தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

09.08.2022. 10.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:மக்களே உஷார்.. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக உருவாகுமா..? வானிலை மையம் அறிவிப்பு..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுஇகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:விடாது வெளுக்கும் கனமழை.. ஆறுகளில் காட்டாற்று வெள்ளம்.. நிரம்பிய முக்கிய அணைகள்.. தற்போதைய அப்டேட்..

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

06.08.2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌.

07-08-2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.  ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேலும் படிக்க:உஷார் !! நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை.. 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

08-08-2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக
கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு
அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

09-08-2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ தமிழக
கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌.

மேலும் படிக்க:Viral video : ஜவ்வாது மலையில் கனமழை - வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இருசக்கர வாகனம்

10-08-2022: கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌. குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக
கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு
அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamilnadu Government: மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு.. எத்தனை காலி இடங்கள்? என்னென்ன தகுதிகள்? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Petrol Diesel Price Hike: அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.