நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கண்ணீருடன் கதறிய பெண் தாசில்தாருக்கு நீதிபதி என்ன தண்டனை வழங்கினார் தெரியுமா?

Published : Aug 06, 2022, 12:33 PM ISTUpdated : Aug 06, 2022, 12:35 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. கண்ணீருடன் கதறிய பெண் தாசில்தாருக்கு நீதிபதி என்ன தண்டனை வழங்கினார் தெரியுமா?

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா கடலடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தார் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மாலை வரை அவர் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா கடலடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கலசப்பாக்கம் தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- AC வெடித்ததில் படுக்கையிலேயே உயிரிழந்த இளைஞர்! என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே!நெஞ்சில் அடித்து கதறிய மனைவி

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி முருகன் தரப்பில் 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாரை குற்றவாளி என அறிவித்தது. மேலும், தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக சம்பந்தப்பட்ட தாசில்தாரை நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் உயர்நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது ஆரம்பம்தான் எனவும் எச்சரித்திருந்தார்.

அதன்படி, நீதிமன்றத்தில் பெண் தாசில்தார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், ஆக்கிரமிப்பை மூன்று வாரங்களில் அகற்றுவதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.  சிறை தண்டனை விதித்தால், சமூகத்தில் அவருக்கும், குடும்பத்தினருக்கும் ஏற்படும் நிலையை, நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.'சிறிய அளவில் வேண்டுமானால் தண்டனை கொடுங்கள் என்றார்.

இதையும் படிங்க;-  ஆகஸ்ட் 1ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

தாசில்தார் லலிதாவும், கண்ணீர் மல்க நின்றார். இதனையேற்றுக் கொண்ட நீதிபதிகள் பெண் தாசில்தாரருக்கு கடுமையான தண்டனை விதிக்காமல் இன்று மாலை நீதிமன்ற நேரம் முடியும் வரை அவரை நீதிமன்றத்தில் இருக்கும்படி நூதன தண்டனையை வழங்கி உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதற்கு, பெரும்பாலும் ஊழல் தான் முக்கிய காரணம் எனவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!