பிரைட் ரைஸில் புழு... சென்னையில் பிரபல உணவகத்திற்கு ஆப்பு..!

By vinoth kumarFirst Published Aug 5, 2022, 10:09 AM IST
Highlights

சென்னையில்  உள்ள பர்வீன் ஃபாஸ்ட் புட் கடையில் சாப்பிட்ட பீப் பிரைட் ரைஸில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சென்னையில்  உள்ள பர்வீன் ஃபாஸ்ட் புட் கடையில் சாப்பிட்ட பீப் பிரைட் ரைஸில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சமீபகாலமாக கெட்டுப்போன கூல்ட் ரிங்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உயிரிழப்பு சம்பவம் தொடர் கதையாக இருந்து வருகிறது. சவர்மா, பிரியாணி, சாப்பாட்டில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற உணவுகளாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது அதிகாரிகள் சோதனை செய்தாலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி.. தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி..!

இந்நிலையில், சென்னை மின்ட் மினி தெருவில் ஹசன் என்பவருக்கு சொந்தமான பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு தனது நண்பர்களுடன் வந்த முகமது பெரோஸ் என்பவர் பீப் பிரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அதில் வெந்து இறந்து போன நிலையில் புழு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

உடனே இது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளன. இதுதொடர்பான உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்திய பிறகு கடையை மூட போலீசார் உத்தரவிட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க;- பிரபல ஹோட்டல் சாப்பாட்டில் பேண்டேஜ்.. அலட்சியம் காட்டிய ஊழியர்கள்.. உரிமையாளர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

click me!