பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை..காவலர்களுக்கு வாழ்த்து சொன்ன கமல்

By Kanmani PFirst Published Aug 5, 2022, 12:44 PM IST
Highlights

தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 21 காவலர்கள் மூன்று பாய்மரப்படகுகள் மூலம் சென்னையிலிருந்து கடல் வழியே ராமேஸ்வரம் சென்று மீண்டும் சென்னை திரும்பி உள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இப்பயணம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது பாராட்டுக்குரியது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாதுகாப்பு குழுமம் சார்பாக கடந்த மாதம் 'மரைன் போலீஸ் பாய்மரப்படகு பயணம் - 2022' என்னும் பெயரில் கடலோர பாதுகாப்பு குழுமத்தை  சேர்ந்தகாவலர்கள் பாய்மரப்படகு மூலம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர். 21 காவலர்கள் மூன்று பாய்மரப்படகுகளில் சென்னையில் இருந்த ராமேஸ்வரம் வரை சென்று திரும்பி உள்ளனர்.

உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்டுகளில் இடம்பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழக பாதுகாப்பு குழுமத்துடன் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.  கடந்த மாதம் ஒன்பதாம் தேதி சென்னையில் இருந்து மண்டபம் வரை அதாவது 500 கடல் மையில் தூரத்திற்கு பாய்மரப்படகு பயணம் மேற்கொள்ளப்பட்டது.  தமிழக கிழக்கு கடலோர பகுதியில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும், மீனவ மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக இது நடத்தப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..சென்னையில் முன்னாள்,இன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனையா..? 47 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு

இந்த பாய்மர பயணத்தை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய தலைவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர்,கடலூர பாதுகாப்பு குழுமம் கூடுதல் டிஜிபி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தற்போது இந்த நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு.. சொகுசு காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய நேரு! விலை இத்தனை கோடியா? இந்த காரை யாரெல்லாம் வச்சிருக்காங்க தெரியுமா?

இந்நிலையில் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்தான பதிவில்,  தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 21 காவலர்கள் மூன்று பாய்மரப்படகுகள் மூலம் சென்னையிலிருந்து கடல் வழியே ராமேஸ்வரம் சென்று மீண்டும் சென்னை திரும்பி உள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இப்பயணம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை வீட்டில் சோதனை நிறைவு… கைப்பற்றப்பட்ட ரொக்கம் வங்கியில் ஒப்படைப்பு!!

தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த 21 காவலர்கள் 3 பாய்மரப் படகுகள் மூலம் சென்னையிலிருந்து கடல் வழியே ராமேஸ்வரம் சென்று, மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இப்பயணம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. pic.twitter.com/o8QiHZrmKx

— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)

 

click me!