அன்புசெழியன் உட்பட 40 இடங்களில் ஐ.டி ரெய்டு.. வசமாக சிக்கிய ரூ.200 கோடி !!

By Thanalakshmi VFirst Published Aug 6, 2022, 4:08 PM IST
Highlights

அன்புச்செழியன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூபாய் 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

அன்புச்செழியன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூபாய் 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சுமார் 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை வீட்டில் சோதனை நிறைவு… கைப்பற்றப்பட்ட ரொக்கம் வங்கியில் ஒப்படைப்பு!!

தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட 5 ஆம் தேதி வரை வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரின், தமிழ் திரையுலக தயாரிப்பாளர் அலுவலகம், வீடு மற்றும் உறவினர் வீடுகளில் ஐ.டி ரெய்டு நடைபெற்றது. திரையரங்குகளில் கிடைக்கும் வருமானத்தை விநியோகஸ்தர்கள் மறைத்துள்ளனர் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:அன்புச்செழியனை தொடர்ந்து 4 முன்னணி பட தயாரிப்பாளர்களை ரவுண்ட் கட்டும் ஐடி ரெய்டு.. யார் யார் தெரியுமா?

பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, லட்சுமண குமார், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் சொந்த இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், 'திரைத்துறையினர் இதுவரை ரூ. 200 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியன் வீட்டில் 26 கோடி ரொக்கம், 3 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக, அன்புச்செழியன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர் பிரபு, கலைப்பலி, எஸ் தாணு உள்ளிட்ட திரைப்பிரபலங்ளின் வீடு, அவர்களின் அலுவலகம் என 40 இடங்களில அதிரடி சோதனை நடந்தியதில், கணக்கில் வராத 200 கோடி ரூபாய் சிக்கியிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!