8 ரயில்களில் 2ஆம் வகுப்பு பெட்டிகளைக் குறைத்து ஏசி பெட்டிகளை சேர்க்கும் தெற்கு ரயில்வே!

By SG Balan  |  First Published Jun 19, 2023, 8:37 PM IST

தெற்கு ரயில்வே எட்டு விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளுக்குப் பதிலாக 3 டயர் ஏசி பெட்டிகளைச் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.


தெற்கு ரயில்வேயில் மங்களூரு விரைவு ரயில் உள்ளிட்ட எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டி ஒன்றை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 3 டயர் ஏசி பெட்டிகளை இணைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் தேவையைக்  கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் - மங்களூரு எக்ஸ்பிரஸ் உட்பட 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச் அகற்றப்பட்டு, 3 டயர் ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்படும். இந்த மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள் செப்டம்பர் மாதம் முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

RAW உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமனம்!

மங்களூரு சென்ட்ரலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் (12602) செப்டம்பர் 13ஆம் தேதி முதல், இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் கூடுதலாக ஒரு ஏசி பெட்டி சேர்க்கப்பட்டு இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களுரு சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயிலிலும் (22637) இதே மாற்றம் செய்யப்பட்டு ஒரு ஸ்லீப்பர் பெட்டிக்குப் பதிலாக ஏசி பெட்டி சேர்க்கப்படும். இந்த மாற்றத்துடன் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

இது தவிர, சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் இடையேயான அதிவிரைவு மெயில் (12601) உட்பட இன்னும் 6 ரயில்களிலும் தலா ஒரு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக ஒரு 3 டயர் ஏசி பெட்டி சேர்க்கப்பட்டு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பில் இருந்து தெரியவருகிறது.

மொபைல் பயன்படுத்துவதைத் தடுத்த தாய்... பழி வாங்க திட்டம் போட்ட சிறுமியின் விபரீதச் செயல்!

click me!