இராமநாதபுரம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற திரு உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள பிரம்மதீர்த்த குளத்தில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும், பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகவும் திகழக்கூடிய திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களேஸ்வரி சமேத மங்களநாத சுவாமி ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இங்கு பிரசித்தி பெற்ற மரகத நடராஜர் ஆலயமும் அமைந்துள்ளது. இந்த நடராஜர் ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை திருவாதிரை நட்சத்திரத்தன்று சந்தனம் கலையப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் பல லட்சம் பேர் கலந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; பாபநாசம் பட பாணியில் உடலை புதைத்த கொடூரம்
இந்த நிலையில் இந்த கோவில் வளாகத்திற்குள் அமைந்துள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் ஏராளமான மீன்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றன. இங்கு வரக்கூடிய பக்தர்கள் அந்த மீன்களுக்கு பொரி வாங்கி போட்டு அதன் மூலம் தங்கள் பாவங்களை குறைப்பதாக நம்பப்படுவது உண்டு. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் அந்த பிரம்ம தீர்த்த குளத்தில் வாழ்ந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதப்பதால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வரக்கூடிய பக்தர்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
6 வருடங்களாக பணத்தை தராமல் இழுத்தடிக்கும் அதிமுக பிரமுகர்; ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் தர்ணா
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரியிடம் கேட்ட பொழுது மீன்கள் இறப்பு குறித்து அங்குள்ள தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பிய பிறகு தான் தெரிய வரும். மேலும் வெயில் தாக்கத்தின் காரணமாக கூட மீன்கள இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். உலகப் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் வாழ்ந்த மீன்கள் திடீரென செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.