பரமக்குடி அருகே அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார், வேன், லாரி; 15 பேர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Jun 6, 2023, 2:14 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கார், வேன், லாரி அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொட்டி தட்டி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஒரு வேனும், ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 

Tap to resize

Latest Videos

ராமநாதபுரத்தில் இருந்து அந்த வழியாக காரை பின்தொடர்ந்து வந்த கன்டெய்னர் லாரியும் மோதியது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் மற்றும் வேனில் சென்றவர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

நண்பர்கள் ஏமாற்றியதால் விரக்தி; நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்தி தாய், மகன் தற்கொலை

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி தாலுகா காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூரில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உயிரிழப்பு; உறவினர்கள் மறியலால் பதற்றம்

click me!