மாற்றுத்திறனாளியான தங்கையின் சொத்தை அபகரிக்க முயன்ற அண்ணன்; பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Published : May 30, 2023, 10:18 AM ISTUpdated : May 30, 2023, 10:54 AM IST
மாற்றுத்திறனாளியான தங்கையின் சொத்தை அபகரிக்க முயன்ற அண்ணன்; பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சுருக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியின் சொத்தை அபகரிக்க முயன்ற சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் தீக்குளிக்க முயன்றதால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஊனமுற்ற பெண்ணான கல்யாணி திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு பழனிக்குமார் தனது ஊனமுற்ற மகளான கல்யாணிக்கு பார்த்திபனூர் மும்முனை சாலையில் உள்ள 500 சதுர அடி இடத்தை உயில் எழுதி வைத்துள்ளார். 

பின்னர் 2008ம் ஆண்டு பழனிக்குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு அதில் வரும் வாடகையை வைத்து கல்யாணி வாழ்ந்து வந்தார். அந்த இடத்தை கல்யாணியின் உடன் பிறந்த சகோதரர் சண்முகம் போலியான ரசீதுகள் மூலம் தனது பெயரில் மாற்றி வாடகை எனக்குத்தான் தரவேண்டும் என தகராறு செய்துள்ளார். இதனால் கல்யாணி நீதிமன்றம் சென்றார். அங்கு 2014ம் ஆண்டு அந்த இடம் கல்யாணிக்கு சொந்தம் என தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த தீர்ப்பை சிறிதும் மதிக்காத சண்முகம் தொடர்ந்து கல்யாணியை துன்புறுத்தி அந்த இடத்தின் வாடகையை வாங்க விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். 

சேலத்தில் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்

நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் சண்முகம் இடத்தை தரவில்லை என தாசில்தார், மாவட்ட ஆட்சியர், என அனைவரையும் பார்த்து மனு அளித்துள்ளார். ஆனால் இவரது மனுவை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பரமக்குடி சார் ஆட்சியர் இல்லத்திற்கு வந்த கல்யாணி தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி அவரை தடுத்தனர். 

ராங் ரூட்டில் வந்து ராங்காக பேசிய இளம்பெண்; அபராதம் விதித்த போலீசார்

இது குறித்து தகவல் அறிந்து வெளியே வந்த சார் ஆட்சியர் அக்தாப் ரசூல் நடந்த விஷயங்களை கல்யாணியிடம் கேட்டறிந்தார். உடனடியாக கல்யாணியை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார். இது தொடர்பாக விரைவில் கல்யாணியின் சகோதரர் சண்முகம் அபகரித்த சொத்தை மீட்டு உரியவரிடமே ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று அவர் உறுதி அளித்ததார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!
TASMAC Holiday: மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!