தொழிலாளியின் திருமணத்தை நடத்தி வைக்க பரமக்குடிக்கு வந்த சிங்கப்பூர் முதலாளி.. உற்சாக வரவேற்பு..

By Ramya s  |  First Published May 28, 2023, 12:31 PM IST

தனது தொழிலாளியின் திருமணத்தை நடத்தி வைக்க பரமக்குடிக்கு வருகை தந்த சிங்கப்பூர் முதலாளிக்கு தமிழரின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செய்களத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் செல்லமீனாள் தம்பதியிரின் மகன் காலைவாணன் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காலைவாணணுக்கும் பரமக்குடி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தவல்லி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் பார்த்திபனூரில் இன்று நடைபெற்றது.

இதையும் படிங்க : மருத்துவம் பயிலும் உரிமையைப் பறிக்கும் பாஜக.! மனுதர்ம சூழ்ச்சிகளுக்கு தமிழ் மண் ஒருபோதும் அடிபணியாது- சீமான்

Latest Videos

undefined

இந்நிலையில் தனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் தனது முதலாளியான சிங்கப்பூரை சேர்ந்த ஸ்டீபன் லீ குவான்க்கு கலைவாணன் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து இன்று பார்த்திபனூரில் நடைபெற்ற  காலைவாணன் திருமணத்திற்கு  சிங்கப்பூரை சேர்ந்த ஸ்டீபன் லீ குவான் வருகை தந்தார். அவரை வரவேற்கும் விதமாக ட்ரம்ஸ் செட் வைத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் அவருக்கு, மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் தமிழர்களின் பாரம்பரியபடி உற்சாகமாக வரவேற்பளித்தனர். 

பின்னர் ஸ்டீபன் லீ குவான்,  திருமாங்கல்யத்தை தனது கையால் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். அதை தொடர்ந்து பேசிய ஆர், தான் இதுவரை தமிழர்களின் கலாச்சாரம் உபசரிப்பை இதுவரை நேரில் பார்த்ததில்லை என்றும், இது வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது என பாராட்டினார்.

இதையும் படிங்க : Civil service exam : கோவையில் தேர்வை எதிர்கொள்ளும் 9 மாத கர்ப்பிணி பெண்

click me!