Watch : வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றம்

By Dinesh TG  |  First Published May 10, 2023, 3:03 PM IST

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நிலவும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. அக்னி வெயிலின் காலம் தொடங்கிய போதிலும் கோடை மழையால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.

இந்தநிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக வானிலை மையம் அறிவித்தது. அதன் காரணமாகவே தமிழக தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் மீது நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

அட்சரேகை 8.3°N மற்றும் தீர்க்கரேகை 89.5°Eக்கு அருகில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே சுமார் 510 கிமீ, காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தென்-தென்மேற்கே 1480 கி.மீ மற்றும் சிட்வே (மியான்மர்) க்கு தென்-தென்மேற்கில் 1360 கி.மீ. தூரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. தொலைதூர புயல் அபாயத்தை தெரிவிக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

click me!