பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் சென்றுள்ளார்.
பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் சென்றுள்ளார். இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் சென்றடைந்த அவர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
இதையும் படிங்க: குழந்தை வரம் வேண்டிய தம்பதி; கணவரின் சம்மதத்துடன் பெண்ணை படுக்கைக்கு அழைத்த போலி சாமியார்
undefined
இதை அடுத்து நாளை காலை ராமேசுவரம் கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்கள்-ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் அவர், மாலை தேவிப்பட்டினத்தில் மீனவர்களை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் எட்டிவயல் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறியும் ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை மறுநாள் (ஏப்.19) உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.
இதையும் படிங்க: மனைவியை மதம் மாற்ற முயற்சி; சீருடையுடன் வந்து புகாரளித்த ராணுவ அதிகாரியால் பரபரப்பு
அதைத் தொடர்ந்து பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும், மாலையில் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கும், சென்று அஞ்சலி செலுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை வந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். ஆளுநர் வருகையையொட்டி ராமநாதபுரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.