குளத்தில் குளிக்கச் சென்ற தற்காப்பு கலை ஆசிரியர் நீரில் மூழ்கி பலி

By Velmurugan s  |  First Published Apr 6, 2023, 6:45 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற தற்காப்பு கலை ஆசிரியர் பாண்டி மணி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த நம்புராஜின் மகன் பாண்டிமணி(வயது 20). இவர் பகுதி நேரமாக சிறுவர்களுக்கு சிலம்பம் கற்றுத்தரும் ஆசனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பொழுது ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்த நண்பர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தனர். மேலும் விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் பாண்டிமணியின் உடலை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Latest Videos

undefined

மக்களை தூண்டிவிட்டே ஸ்டெர்லைட் ஆலையை மூடினர் - ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிரற்ற நிலையில் பாண்டி மணியின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரமக்குடி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீரில் மூழ்கி தற்காப்பு கலை பயிற்றுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க்; 10 ஆயிரம் பேருக்கு வேலை - அமைச்சர் அறிவிப்பு

click me!