ராமநாதபுரம் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு, புதிய தலைவரான தரணி ஆர் முருகேஷ்

By SG Balan  |  First Published Mar 27, 2023, 7:52 PM IST

ராமநாதபுரம் பாஜகவில் புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது.


ராமநாதபுரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய நிர்வாகிகள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் நிர்வாகப் பொறுப்புகள் கலைக்கப்பட்டது பற்றி தமிழ்நாடு பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகின்றன என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

மாதம் ரூ.11,000 பென்ஷன் கொடுக்கும் எல்ஐசி ஜீவன் சாந்தி திட்டம்!

அறிவிக்கை

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரு.தரணி.R.முருகேசன் அவர்கள் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்.

தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்..

- மாநில தலைவர் திரு. pic.twitter.com/RH9CxgohJq

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)

புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அதுவரை அனைவரும் கட்சிப் பணியிகளைத் தொடர்ந்து செய்யமாறும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

சிறிது நேரத்தில் வெளியான மற்றொரு பதிவில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி. ஆர். முருகேசன் அவர்கள் புதிய மாவட்டத் தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டது. அவரது பணிகள் சிறக்க வாழ்த்துவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் கதி என்ன ஆகும்? அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்

கோடை காலம் துவங்கி உள்ள இன்றைய சூழலில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள், அனைவரும் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

click me!