கடலில் வீசப்பட்ட 32 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்; மன்னார் வளைகுடாவில் 2 நாள் தேடலுக்குப் பின் சிக்கியது

By SG Balan  |  First Published Jun 1, 2023, 10:59 PM IST

கைப்பற்றப்பட்ட 32 கிலோ தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி. இவை இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டபோது கடலில் வீசப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதி வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள், தங்கம் போன்றவற்றைக் கடத்தும் தொழில் அமோகமாக நடக்கிறது எனக் கூறப்படுகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதில் இருந்து இதைப்போன்ற கடத்தல்கள் அதிகமாக நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலில் இரு தினங்களுக்கு முன்னால் இலங்கை மன்னார் வளைகுடா வழியாக ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்த வரப்படுகிறது என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன் பேரில் அதிகாரிகள் உடனடியாக கடலோர காவல்படையின் உதவியுடன் கடல் வழித்தடத்தில் ரோந்து சென்றனர்.

Tap to resize

Latest Videos

சாதி கொடுமையால் ஐஐடி மாணவர் தற்கொலை: குற்றப் பத்திரிகையில் வெளியான அதிர்ச்சி தகவல்

அப்போது அந்தப் பகுதியில் வந்த படகு ஒன்றில் இருந்த முகமது நாசர், அப்துல் ஹமீது, ரவி ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தபோது அவர் சந்தேகத்துக்கு இடமான பதில்களைக் கூறியுள்ளனர். மேற்கொண்டு அவர்களை விசாரிக்கவும் தங்கத்தைக் கடத்திவந்ததையும் இந்த விஷயம் கசிந்துவிட்டதை அறிந்து அனைத்தையும் கடலில் வீசிவிட்டதாவும் ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடம் கிடைத்த தகவல் மூலம் வேதாளையை சேர்ந்த சாதிக் அலி, அசாருதீன் ஆகியோரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ தங்கக் கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கண்டுபிடித்து மீட்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய 19 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் நவீன கருவிகள் உதவியுடன் தங்கக் கட்டிகள் வீசப்பட்ட பகுதியில் தேடுதல் வேட்டை இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. மூன்றாவது நாளான இன்று ஆழ்கடலில் தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சல் கடலோர காவல்படை வீரர்களிடம் சிக்கியது. அதைக் கரைக்குக் கொண்டுவந்து திறந்து பார்த்தபோது, 12 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரிந்தது.

மொத்தம் 32 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தக் கடத்தல் தங்கம் எங்கிருந்து வந்தது, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, எத்தனை காலமாக இந்தக் கடத்தல் நடைபெற்று வருகிறது என்பவை குறித்து அறிய அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: சிஎஸ்கே சி.இ.ஓ. தகவல்

click me!