
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர் மின்கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் மேற்கொண்டு வந்தனர். தமிழ்நாடு முழுவதும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து தொழில்துறை நிறுவனங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு போராட்டம் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின் கட்டண உயர்வு சம்பந்தமாக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த அரசாணையில் தங்களது கோரிக்கைகள் நியாயமாக நிறைவேற்றப்படவில்லை. மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பலமுறை எச்சரித்தும் திருந்தாத மகள்; ஆத்திரத்தில் கத்தியால் வெட்டிய தந்தை
நிலைக்கட்டணம் ரூ.35 ரூபாயிலிருந்து 154 ரூபாயாக ஒரு கிலோவாட்டிற்கு உயர்த்தி உள்ளனர். அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தும், ரத்து செய்யப்படவில்லை. அதேபோல பிக் ஹவர் கட்டணம் 8 மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 15 சதவீதம் உயர்த்தி உள்ளனர். அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம் அந்த கோரிக்கையும் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை.
அதேபோல சோலார் தகடுகள் பொருத்தி அதன் மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு 1 ரூபாய் 55 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதுவும் ரத்து செய்யப்படவில்லை. அதே போல் 12 கிலோ வாட்டிற்கு குறைவாக மின்சாரத்தை உபயோகிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் டேரிஃப் 3Ib படி உள்ளது.
நிரம்பும் தருவாயில் தேனி மாவட்ட அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி
அதனை 31 A விற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்திருந்தோம். ஆனால் அந்த கோரிக்கையும் அது சம்பந்தமான எந்தவித அறிவிப்பும் இல்லை. எனவே தமிழ்நாடு முழுவதும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் சார்பில் வேலை நிறுத்த மற்றும் கதவடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.