காதலியை விட்டு பிரித்ததால் இளம் காதலன் தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை

Published : Sep 25, 2023, 10:42 AM IST
காதலியை விட்டு பிரித்ததால் இளம் காதலன் தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை

சுருக்கம்

காதலியை விட்டு தன்னை பிரித்து வைத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள புதுப்பேர் என்ற கிராமத்தில் சஞ்சய் என்ற நபர் வசித்து வந்துள்ளார். 20 வயதாகும் சஞ்சயும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். எனினும் அந்த பெண் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குடும்பத்தினரும் எதிர்ப்பையும் மீறி சஞ்சயும் அவரின் காதலியும் வீட்டை விட்டு ஓடிப்போய் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு தங்கள் சொந்த ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சோமங்கலம் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே தங்கள் மகனை காணவில்லை என்று சஞ்சயின் பெற்றோர் சோமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கும் முன்பு சஞ்சயையும் அந்த பெண்ணையும் கண்டுபிடித்த போலீசார் அந்த பெண் மைனர் என்பதாலும்,  சஞ்சயும் திருமண வயதை எட்டவில்லை என்பதாலும் இருவருக்கும் அறிவுரை கூறி தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சஞ்சய் நேற்று தற்கொலை செய்து உயிரை மாயத்துக்கொண்டார். இந்த தகவலை அறிந்த சஞ்சயின் பெற்றோர், அவரின் எரிந்த நிலையில் இருந்த அவரின் உடலை புதைக்கமுயன்றதாக புதுப்பேர் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சஞ்சயின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியை விட்டு தன்னை பிரித்து வைத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

பணி ஆணை முதல் கழிவரை ஒப்பந்தம் வரை.. புகுந்து விளையாடிய KN நேரு.. மொத்த வசூல் ரூ.1020 கோடியாம்
கொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!