சிலிக்கா ஜெல் கலந்த ஜூஸ்: 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

By Manikanda Prabu  |  First Published Sep 25, 2023, 10:04 AM IST

சிலிக்கா ஜெல் கலந்த ஜூஸ் குடித்த சிறுவர்கள் உள்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


திருவள்ளூர் மாவட்டத்தில் சிலிக்கா ஜெல் கலந்த எலுமிச்சை ஜூஸ் குடித்த சிறுவர்கள் 7 பேர் உள்பட 13 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர்களது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆரணி கிராமத்தில் ஜூஸ் கடைக்காரர் ஒருவர், ஐஸ் கட்டிகள் கிடைக்காததால் ஐஸ் கட்டியில் உறைந்த சிலிக்கா ஜெல்லை சேர்த்து எலுமிச்சை ஜூஸ் தயாரித்துள்ளார். அதனை குடித்ததால் 13 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், உணவு ஒவ்வாமைக்கான சிகிச்சை அளித்தனர். ஐஸ் கட்டிகளுக்குள் சேமித்து வைக்கப்பட்ட சிலிக்கா ஜெல் நச்சுத்தன்மையற்றது என்றாலும், அதை உட்கொள்வது கடுமையான குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர், அவர்கள் 13 பேரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Power Shutdown in Chennai: சென்னையில் இத்தனை இடங்களில் இன்று மின் தடையா.? உங்கள் பகுதியும் இருக்கா.?

பொன்னேரி மருத்துவமனையில் உறைவிப்பான் பெட்டிகள் தட்டுப்பாடு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 4 பெட்டிகள் உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்கும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், புதிய ரத்த வங்கியை இங்கு அமைக்க உள்ளதாகவும், அது 15 நாட்களில் திறக்கப்பட்டும் எனவும் தெரிவித்தார். 

பொன்னேரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் மையம் இருப்பதாக விளம்பரம் செய்ய நடவடிக்கை எடுக்காதது, மீஞ்சூர் அருகே மேட்டுப்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் கர்ப்பிணிகள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு கூடுதல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது போன்ற செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

பொன்னேரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் தொற்றுநோய்களின் போது இறந்த செவிலியர்களின் குடும்பங்களுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு கோரிக்கைகளை தீர்ப்பது தொடர்பான புகார்களை பரிசீலிப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

click me!