மீண்டும் சிக்கிய எச் .ராஜா... சர்ச்சை கருத்து, அவதூறு பேச்சு..! அதிரடியாக வழக்கு பதிவு செய்த போலீஸ்

By Ajmal Khan  |  First Published Sep 25, 2023, 6:26 AM IST

மத மோதல்களை உண்டாக்கும் வகையிலும், பெரியார் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பேசியதாக எச்.ராஜா மீது புகார் செய்யப்பட்டதையடுத்து சிவகங்கை போலீசார்  5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 


சர்ச்சை கருத்து- எச்.ராஜா மீது புகார்

பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குள்ளாகும் கருத்தை தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக அவர் மீது ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கடந்த 20-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி தொடர்பாகவும் மோசமாக விமர்சித்ததாக  கூறப்படுகிறது. இதனையடுத்து திமுக நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் 4 பிரிவுகளில் காளையார்கோவில் போலீசார் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். 

Tap to resize

Latest Videos

எச்.ராஜா மீது வழக்கு பதிவு

இந்தநிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்தை தெரிவித்து எச்.ராஜா சிக்கியுள்ளார்.  சிவகங்கையில் கடந்த 22.09.2023 அன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாஜக தேசிய தலைவர் H.ராஜா தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களையும்  அவதூறாக பேசியுள்ளார்.

மேலும்  சிவகங்கை  மக்களிடையே மத   மோதல் போக்கை உருவாக்கும் எண்ணத்தோடு பேசியதாகவும்  சிவகங்கை திமுக நகர்கழகச் செயலாளர் துரை ஆனந்த் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் H.ராஜா மீது  IPC 153,153,A, 294/b 295,A, 505(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ்  குற்ற எண் 478/23 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்

டாலர் சிட்டி, டல் சிட்டி என பேசுவதா.? நாட்டு நடப்பை எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை?- அண்ணாமலை

click me!