3வது முறை பாஜக ஆட்சி? அதிமுக கதி! இளைஞர்கள் பக்கோடா விற்கணுமா? முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

மிகப்பெரிய வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்றப்பட்டு விட்டது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கட்சி பாஜக என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.


திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோவை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், " வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது வாக்குச்சாவடி முகவர்களின் முதல் கடமை.

வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளர் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்” என்று திமுகவினருக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமை தொகையை வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லை என கூறி கொள்ளையடிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது.

Latest Videos

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று கூறி ஏமாற்றியவர் பிரதமர் மோடி. இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார். பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி, தவறான பொருளாதார கொள்கையினால் திருப்பூர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை பயமுறுத்தி கூட்டணியில் வைத்துள்ளது பாஜக. அதிமுக - பாஜக சண்டை போடுவதாக நடிக்கின்றன. அதிமுகவை ஆதரித்தால் அவர்களின் ஊழலுக்கு பாஜகவும் பொறுப்பேற்க வேண்டி வரும். சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து தேர்தல் வந்தால், அதிமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும்.

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக, 3வது முறையாக ஆட்சிக்கு வராது. தமிழகத்தில் பாஜக டெபாசிட் கூட வாங்க முடியாது” என்று அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி.? முழு விபரம் இதோ !!

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

click me!