விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 69 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பொன்னாபுரம், அலங்கியம், கோவிந்தாபுரம் சத்திரம் தென்தாரை அனுமந்தாபுரம் உள்ளிட்ட இடங்களில் ½ அடி முதல் 7 அடி வரையிலான 69 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை தாங்கி கொடிய அசைத்து துவக்கி வைத்தார்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் செய்யப்பட்டன. விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொறி, பழங்கள் படையலாக வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் வாகனங்கள் மற்றும் டிராக்டர்களில் பொள்ளாச்சி ரவுண்டானாவுக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக பூக்கடை கார்னர், ஜவுளிக்கடை வீதி, சோழ கடைவீதி, ஐந்து சாலை சந்திப்பு வழியாக தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு அமராவதி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
நீட் தேர்வில் 0 % எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாமா.! அப்போ ஏன் தேர்வை நடத்தனும்- உதயநிதி
ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கோவை மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையில் திருப்பூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன், ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.