கடந்த ஜூலை 27-ம் தேதி பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கையில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகியின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க வந்த எச்.ராஜா காலில் விழுந்து செல்வக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சிவகங்கை அருகே வேளாங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (52). அப்பகுதியில் செங்கல்சூளை நடத்தி வந்தார். இவர் பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த செல்வக்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இதனையடுத்து மேலப்பிடாவூரைச் சேர்ந்த மருதுபாண்டி (20), அருண்குமார் (20), வசந்த்குமார் (25), சட்டீஸ்வரன் (21), விஷால் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: இப்படியே போச்சுனா! இளைஞர்களை சீரழித்தது திமுக தான்! வரலாற்றின் கருப்பு பக்கங்களில் பதிவாகும்!அன்புமணி வார்னிங்
இந்நிலையில், புதுப்பட்டி கிராமத்தில் கொலைக்காக பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்த இடத்தை காண்பிப்பதற்காக, குற்றவாளிகளை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது சார்பு ஆய்வாளர் பிரதாப்பை தாக்கிவிட்டு வசந்த குமார் தப்ப முயன்றார். இதைக்கண்ட ஆய்வாளர் மணிகண்டன், வசந்தகுமாரை துப்பாக்கியால் காலில் சுட்டனர். இதையடுத்து காயமடைந்த வசந்தகுமாரும், சார்பு ஆய்வாளர் பிரதாப்பும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கொலை செய்யப்பட்ட வேலாங்குளத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி செல்வக்குமார் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க சென்றார். அப்போது செல்வக்குமாரின் குடும்பத்தினர் எச்.ராஜாவின் காலில் விழுந்து என் மகனை கொலை செய்தவர்களை சும்மாவிடக்கூடாது என அழுது கதறினர். இதனையடுத்து செய்தியார்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஓழுங்கு சீர்கேட்டு உள்ளது என விமர்சித்திருச்தார்.