சென்னையில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பிடிபட்ட திமுக நிர்வாகி சையது இப்ராஹிமை, கட்சியிருந்து நிரந்தரமாக நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் புதிய பேருந்துநிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இரு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் சுமார் ரூ.70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கைபற்றப்பட்டுள்ளது. அவர்கள், செங்குன்றம் பகுதியை சேர்ந்த மன்சூர் மற்றும் சையது இப்ராஹிம் என்பது தெரியவந்துள்ளது. இதில், இப்ராஹிம் என்பவர் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர்.
ஏற்கனவே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபஃர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் ஒரு திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Murder : மீண்டும் பயங்கரம்.! அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட விரட்டி கொலை.! நடுரோட்டில் துடிதுடித்து பலி
இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சையது இப்ராஹிமை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி திமுக கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எந்தவிட தொடர்பும் கொள்ளக்கூடாது என்றும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.