பாலியல் சர்ச்சை பள்ளி முதல்வர் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றம்! அதிர்ச்சியில் பெற்றோர்!

By manimegalai aFirst Published Sep 8, 2018, 7:14 PM IST
Highlights

குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ஒருவர் கர்நாடகாவில் இருந்து தமிழக பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த மாற்றம், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குரியாக உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் ஒருவர் கர்நாடகாவில் இருந்து தமிழக பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த மாற்றம், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குரியாக உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

பெங்களூரு கேந்திர வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியராக செயல்பட்டவர் குமார் தாகூர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 
மாதம், கேந்திர வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், சைல்டு ரைட்ஸ் டிரஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் 
தலைமை ஆசிரியர் தாகூர் மீது புகார் ஒன்றை கூறியிருந்தார். 

அந்த புகாரை அடுத்து பல்வேறு, பலகட்டங்களாக விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு பதிவானபோதிலும், குமார் தாகூர் பெங்களூரு பள்ளியில் இருந்து தற்போது திருவண்ணாமலையில் உள்ள கேந்திர வித்யாலயாவில் மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், குமார் தாகூர், பள்ளியில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஆன்டிரூ ஜேசுராஜ் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

இது குறித்து ஆன்டிரு ஜேசுராஜ் கூறும்போது, தமிழகத்தில் உள்ள கே.வி. பள்ளியில் குழந்தைகள் மத்தியில் பணிபுரிய குமார் தாகூர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சியாக உள்ளது என்றார். தரமான கல்வி என்பது வெறும் பள்ளியில் கட்டடங்களையும், கணினி அறைகளையும் மட்டுமே குறிக்காது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை தருவதே சிறந்த பள்ளியாக இருக்கமுடியும். திருவண்ணாமலை பள்ளியில் குமார் தாக்கூர் பணிபுரியும் ஒவ்வொரு நிமிடமும் அங்குள்ள குழந்தைகளுக்கு ஆபத்துதான். அவர் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்கிறார்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு குமார் தாகூர் பணியமர்த்தப்படுவது இது முதல் முறை அல்ல என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்த கிர்பா ஆல்பா கூறும்போது, குமார் தாகூர் பணியிட மாற்றம் சட்டப்பூர்வமானதல்ல. நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் வரை அவர் எந்தப் பதவியிலும் நீடிக்கக்கூடாது. தற்போது மீண்டும் மாணவர்களுக்கு முதல்வராக வந்துள்ளார்.

இதன்மூலம் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனை நாங்கள் எதிர்க்கிறோம். கேந்திரிய வித்யாலயா இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடியாக நாங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதுவோம் என்று கூறியுள்ளார்.

தன் மீது எழுந்துள்ள விமர்சனம் குறித்து குமார் தாகூர் கூறும்போது, நான் இங்கு தலைமை ஆசிரியராக வேலை செய்கிறேன். என் மீதான வழக்கு கர்நாடகாவில் நடந்து வருகிறது. எனக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது என்பது துறை ரீதியாக எடுத்த முடிவு. என்ன காரணத்திற்காக நான் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டேன் என்றே எனக்கு தெரியாது. இதற்கு மேல் வேறு தகவல்களை கூறமுடியாது என்கிறார்.

குமார் தாக்கூர் விவகாரம் குறித்து தமிழக குழந்தைகள் நல ஆணையர் நிர்மலா கூறும்போது, குழந்தைகள் இருக்கும் இடத்தில் 
பாலியல் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பணிபுரிவது தொடர்பாக மத்திய மனிதவள அமைச்சகம் முடிவு எடுக்க வேண்டும் 
என்கிறார்.

click me!