தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு செந்தில் பாலாஜி பதில் சொல்லியுள்ளார்.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருவதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் புதிதாக மது வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. ஏடிஎம் மெஷின் போல இயங்கும் இந்த இயந்திரத்தில் உரிய தொகையைச் செலுத்தி மது வகைகளை வாங்கிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
undefined
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக அரசின் இந்த மது விற்பனையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழகத்திலும் வந்துவிட்டது மதுபான ஏடிஎம்.. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது...
எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு எதிர்வினையாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி தன் இருப்பைக் காட்டிக்கொள்ளவே இவ்வாறு அறிக்கை விட்டிருப்பதாகச் சாடியுள்ளார்.
"கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், 'உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திரு.பழனிசாமி" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இதேபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனையை வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த விற்பனையை நிறுத்தவில்லை என்றால் உடனடியாக பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2014 முதல் 2023 வரை! பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி கடந்து வந்த பாதை!
அண்மையில் திருமண மண்டபங்களில் மது அருந்த கட்டணம் செலுத்தி அனுமதி பெறலாம் என்று அரசாணை வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. வலுவான எதிர்ப்பு காரணமாக அந்த அரசாணையை தமிழக அரசு மாற்றி அறிவித்தது. இந்நிலையில், மதுபான ஏடிஎம் மூலம் விற்பனையைத் தொடங்கி இருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய தமிழக மதுஒழிப்புத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறினார். ஆனால், 2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பேசிய நிதித்துறை செயலாளர் முருகானந்தம் டாஸ்மாக் விற்பனையை 45 ஆயிரம் கோடியில் இருந்து 50 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
தானியங்கி மது இயந்திரத்தை உடனே அகற்றாவிட்டால் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை