தானியங்கி மது இயந்திரத்தை உடனே அகற்றாவிட்டால் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

By SG Balan  |  First Published Apr 29, 2023, 7:59 PM IST

சென்னை கோயம்பேட்டில் டாஸ்மாக் மதுபான ஏடிஎம் விற்பனை தொடங்கி இருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வன்மையாகக் கண்டித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, அதை நிறுத்தவில்லை என்றால் உடனடியாக போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் புதிதாக மது வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. ஏடிஎம் மெஷின் போல இயங்கும் இந்த இயந்திரத்தில் உரிய தொகையைச் செலுத்தி மது வகைகளை வாங்கிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos

undefined

துரை வைகோ சின்ன பையன், அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - மதிமுக அவைத்தலைவர் அதிரடி

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். "சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மது எனத் தெரிவித்துள்ள அன்புமணி தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானங்கள் வழங்குவதை நிறுத்தவில்லை எனில் உடனடியாக போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் திருமண மண்டபங்களில் மது அருந்த கட்டணம் செலுத்தி அனுமதி பெறலாம் என்று அரசாணை வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. வலுவான எதிர்ப்பு காரணமாக அந்த அரசாணையை தமிழக அரசு மாற்றி அறிவித்தது. இந்நிலையில், மதுபான ஏடிஎம் மூலம் விற்பனையைத் தொடங்கி இருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக மதுஒழிப்புத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறினார். ஆனால், 2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பேசிய நிதித்துறை செயலாளர் முருகானந்தம் டாஸ்மாக் விற்பனையை 45 ஆயிரம் கோடியில் இருந்து 50 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

தமிழகத்திலும் வந்துவிட்டது மதுபான ஏடிஎம்.. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது..

click me!