எம்.பி பதவி பெற்ற அடுத்த நிமிடமே பாஜகவிற்கு பல்டி அடித்தார் அன்புமணி.! போட்டுத்தாக்கும் செல்லூர் ராஜூ

Published : Mar 06, 2025, 02:26 PM ISTUpdated : Mar 06, 2025, 02:36 PM IST
எம்.பி பதவி பெற்ற அடுத்த நிமிடமே பாஜகவிற்கு பல்டி அடித்தார் அன்புமணி.! போட்டுத்தாக்கும் செல்லூர் ராஜூ

சுருக்கம்

சட்டமன்ற தேர்தலுக்கு முன் பாஜக உடனான கூட்டணி குறித்து அதிமுகவின் நிலைப்பாடு மாறி வருகிறது. திமுகவே எதிரி என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லையென கடந்த மாதம் வரை உறுதியாக தெரிவித்த அதிமுக, தற்போது அதில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளது. தங்களுடைய எதிரி திமுக எனவும், தேர்தல் நேரத்தில் கூட்டணி தொடர்பாக முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளனர். இதே கருத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூன் தெரிவித்துள்ளார்.

 மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட துவரிமான் பகுதியில் அமைந்திருக்கும் சமுதாய கூடம் அருகே பேவர் பிளாக் பதிப்பதற்கான பூமி பூஜையை  செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பொதுச்செயலாளர் கூட்டணி, ராஜ்யசபா தொடர்பாக விளக்கமாக கூறிவிட்டார். எப்படி அமையும் என 6 மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 

ராஜ்யசபா சீட் தொடர்பாகவும் ஏற்கனவே கூறிவிட்டார்.  அம்மா எப்படியோ வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்றுவார்களோ அதே போல யாருக்கு என்ன வாக்குறுதி கொடுத்தார்களோ இதனை எடப்பாடி நிறைவேற்றுவார். தற்போது ராஜ்யசபா எம்பியாக இருப்பவர் அன்புமணி, இதற்கு காரணம் எடப்பாடி,  ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற மறு நிமிடமே அனைத்தையும் மறந்து விட்டு பாஜகவிற்கு தாவி விட்டார். இருந்தாலும் நாங்கள் கொடுத்த வாக்குறுதி கொடுத்ததை நிறைவேற்றினோம். 

 கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், திமுக மட்டுமே ஒரே எதிரி, நாளைக்கு என்ன நடக்கிறது என பார்ப்போம். கூட்டணி தொடர்பாக அந்த நேரத்தில் உள்ள கால சூழ்நிலை பொறுத்து நடவடிக்கை எடுப்போம்.  பாஜகவில் இருந்து வந்துவிட்டோம்,. எனவே தேர்தல் நரேத்தில் உள்ள கால சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுப்பார்கள். எடப்பாடி முதலரமைச்சர் ஆகனும், அதிமுக ஆட்சி அமையனும் இதற்கு யார் துணை வரவேண்டுமோ அவர்களை ஏற்றுக்கொள்ளனும் என கூறியுள்ளார் 

திமுக எத்தனை கட்சியோடு கூட்டணி வைத்தாலும் மக்கள் ஓட்டுப்போட தயாராக இல்லை. மக்கள் எப்போதும் அதிமுக - திமுக என்ற பெரும் கட்சிகளின் தலைமையை தான் விரும்புவார்கள். முன்பு கலைஞரா? - ஜெயலலிதா என்று பார்த்தார்கள். இப்போது ஸ்டாலினா - எடப்படியா? என்று தான் பார்ப்பார்கள். 2026 தேர்தலில் திமுக குடும்பத்தை தவிர மு.க.ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. ஏனென்றால் திமுக குடும்பம் தான் எல்லாமே  அனுபவிக்கிறது. திமுக குடும்பத்திலேயே "Power Politics" உள்ளது.திமுக வில்  கனிமொழிக்கே முக்கியத்துவம் கிடையாது.

தென் மாவட்டத்தில் வரப்பிரசாதமாக உள்ள கலைஞர் நூலகத்தில் இப்போது யாரும் வருவதில்லை என்று கூறி சினிமா படம் திரையிட போவதாக சொல்கிறார்கள். கலைஞர் நூலகத்திற்கு "கலைஞர்" என்று பெயர் வைத்ததால் குளு குளு வென நூலகத்திற்கு வெயில் காலத்தில் கூட யாரும் வருவதில்லை. அமைச்சர் மூர்த்தி மதுரை கிழக்கு தொகுதியில் கவனம் செலுத்துகிறார். நீங்கள் மீண்டும் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு அமைச்சர் மூர்த்திகாக பயந்து போவதற்கு நான் ஒன்றும் கோழை இல்லை. நான் மக்களை சந்திப்பவன் அல்ல. மக்களோடு மக்களாக இருப்பவன். அமைச்சர் மூர்த்தியை அவரது தொகுதியை தக்க வைக்க சொல்லுங்கள் என ஆவேசமாக செல்லூர் ராஜூ கூறினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்