சென்னையில் பயங்கர விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு! 3 பேர் படுகாயம்!

Published : Mar 06, 2025, 12:24 PM ISTUpdated : Mar 06, 2025, 12:28 PM IST
 சென்னையில் பயங்கர விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு! 3 பேர் படுகாயம்!

சுருக்கம்

சென்னையில் அதிகாலை கார் விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை ஊரப்பாக்கத்தில் வியாழக்கிழமை அதிகாலை 5 கல்லூரி மாணவர்கள் காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

இந்த விபத்தில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்கள் தானேஸ் ரெட்டி மற்றும் ஸ்ரேயர்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த முகமது ஜெய்டு, உமா, ஹரிணி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இதையும் படிங்க: அதிகாலையிலேயே அலறிய தூத்துக்குடி! குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த இரண்டு  கல்லூரி மாணவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  தாய், குழந்தைகள் மரண வழக்கில் திடீர் திருப்பம்! குடும்பத்தையே கொலை செய்துவிட்டு கணவர் செய்த பகீர் சம்பவம்!

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போது பரபரப்பாக காணப்படும் இந்த சாலை விபத்து காரணமாக பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!