சென்னையில் மது அருந்திய மாணவி மரணம்! என்ன நடந்தது?

Published : Mar 03, 2025, 07:03 PM ISTUpdated : Mar 03, 2025, 07:04 PM IST
சென்னையில் மது அருந்திய மாணவி மரணம்! என்ன நடந்தது?

சுருக்கம்

செங்கல்பட்டு அருகே அதிக மது அருந்திய மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன உளைச்சலால் தோழியுடன் மது அருந்திய நிலையில், மருத்துவமனையில் கவிதா உயிரிழந்தார்.

College Student Death : செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே, அதிக அளவு மது அருந்திய ஒரு மாணவி உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம், இன்றைய இளைஞர்களின் போதைப்பொருள் மற்றும் மது அருந்தலுக்கு எதிராக கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் இளைஞர்கள், அதிர்ச்சி தரும் சம்பவங்கள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்களின் போதைப்பொருட்கள் மற்றும் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த செயல்கள் பல இடங்களில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் உருவாக்குகிறது. இளைஞர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவது, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதை அறிந்தும், அவர்களின் செயல்கள் இதுவரை குறையாதுள்ளது.

மாணவி கவிதா - தனியார் கல்லூரி மாணவி

செங்கல்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் கவிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவள் தனியாக விடுதியில் வசித்து வந்தவர். இவர் சமீபத்தில், விடுமுறைக்காக அவள் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் ஊரில் இருந்து திரும்பி வந்த போது, அவளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே மன உளைச்சலை போக்க கவிதா தனது தோழியின் அறையில் இரவு முழுவதும் அதிக அளவில் மது அருந்தியுள்ளார். இந்த அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பின்னர், அவருடையை நண்பர் அவரை கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்..

மருத்துவர்கள் கூறிய தகவல்

மருத்துவ பரிசோதனையில், கவிதா இறந்து விட்டதாக கூறப்பட்டது. அந்தப் பரிசோதனையின் பின்னர், கவிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!