நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது சீமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளும், சீமானின் தன்னிச்சையான செயல்பாடுகளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
Nam Tamilar Seeman : தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி தேர்தலில் வாக்குகளை வாங்கி வருகிறது. குறைந்த பட்சம் 10 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்று வருவதால் தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமானின் பேச்சில் மயங்கி இளைஞர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தந்தை பெரியாருக்கு எதிரான கருத்துகளை சீமான் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.
'Fight பண்ணுங்கண்ணா...' சீமானை திடீரென சந்தித்த அண்ணாமலை! பாஜக- நாதக நெருங்கி வரும் பின்னணி!
அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்
மேலும் சீமான் மீது பல்வேறு காவல்நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். அனைவரும் சீமானுக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். மேலும் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் யாருடைய பேச்சையும் கேட்பதில்லையெனவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து விலகியதால் புதிய நபர்களை நியமிக்கும் நடவடிக்கையில் சீமான் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் சந்தன கடத்தல் வீரப்பன் மகளான வித்யா கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட சீமான் வாய்ப்பு வழங்கினார். ஆனால் தேர்தலில் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் வித்யாவிற்கு இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியை சீமான் வழங்கியுள்ளார்
வீரப்பன் மகளுக்கு முக்கிய பதவி
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியை சேர்ந்த வித்யா வீரப்பன் அவர்கள், நாம் தமிழர் கட்சி -இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும்,கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.