அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா.! விளாசும் அண்ணாமலை

Published : Mar 20, 2025, 08:18 AM ISTUpdated : Mar 20, 2025, 08:26 AM IST
அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா.! விளாசும் அண்ணாமலை

சுருக்கம்

தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.

Tamilnadu law and order : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் படப்பை சுரேஷ் உள்ளிட்ட இருவர் கொலை,  நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை, திருப்பூரில் கொலை என அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. எனவே குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கூலிப்படையினரின் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளது. மேலும் தமிழக்தில் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டதாகவும் கூறி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் தொடரும் கொலைகள்

இந்த நிலையில் தொடர் கொலைகள் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. 

 

அண்ணாமலை கண்டனம்

காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? என அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!