தமிழக சட்டசபையில் ஒலித்த சுனிதா வில்லியம்ஸ் பெயர்.!முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 286 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் பத்திரமாக பூமிக்கு திரும்பினார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Chief Minister Stalin congratulated astronaut Sunita Williams in the Tamil Nadu Legislative Assembly KAK

Chief Minister Stalin congratulated astronaut Sunitha Williams : சர்வதேச விண்வெளி மையத்தில் 10 நாட்கள் பணிக்காக சென்ற சுனிதா வில்லியம்ஸ் தான் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்பி வருவது சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து  286 நாட்களாக விண்வெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்து வர அமெரிக்காவின் நாசா பல்வேறு திட்டங்களை வகுத்தது. மேலும் எலான் மாஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ்  பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கியது.

Chief Minister Stalin congratulated astronaut Sunita Williams in the Tamil Nadu Legislative Assembly KAK

Latest Videos

பூமியில் கால் பதித்த சுனிதா வில்லியம்ஸ்

இதனைடுத்து விண்கலத்தில் இருந்து மீட்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினருக்கு  தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விண்வெளியில் உள்ள I.S.S. எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் வில்மோர் அவர்களும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.

பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலம்

இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில், ஃபால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர்.

பாராட்டு தெரிவித்த முதலமைச்சர்

அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்ஸ் அவர்களுக்கும். அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

click me!