இன்னும் 15 நாட்கள் தான்! திமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் 15 நாட்களில் அகற்ற துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

DMK flagpoles should be removed within 15 days! General Secretary Duraimurugan tvk

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். மேலும் எதிர்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த போதும் இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவினை உறுதி செய்தனர். இந்நிலையில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்றிட வேண்டும் என துரைமுருகன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு!

Latest Videos

இதுதொடர்பாக திமுக பொதச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி 27ம் தேதியன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த மார்ச் 06ம் தேதி அன்று உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இன்னும் வீட்டிற்கு பட்டா வாங்கவில்லையா? உடனே பெற சூப்பர் வாய்ப்பு! முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!

எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் - பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்களை 'மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் - அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!