கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு, தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாக இருக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.
chennai reservoir levels today : வடகிழக்கு பருவமழை முடிவடைந்து கோடை காலம் தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் மத்தியிலேயே வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. ஆரம்பமே இப்படி இருந்தால் அக்னி வெயில் காலத்தை நினைத்தாலே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கோடை காலத்தில் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் தற்போதே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் தண்ணீர் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
கோடையை சமாளிக்குமா சென்னை
எனவே தமிழகத்தில் இதே போல் நிலை உருவாகுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதிகபட்ச மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். மரங்களாக இருந்த இடங்கள் தற்போது கட்டிடங்களாக உயர்ந்து விட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே சென்னையில் குடிநீர் இருப்பு எப்படி உள்ளது என சட்டசபையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் இருப்பு என்ன.?
தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு விளக்கம் அளித்துள்ளார். அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் போது, வளசரவாக்கம் தொகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் காரபாக்கம் கணபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் கடந்த ஆட்சி காலத்தில் 900 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது 1110 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள தண்ணீர் கோடை காலம் வரை போதுமானதாக இருக்கும். அடுத்த கோடை காலம் வரை தடை இல்லாமல் தண்ணீர் அளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. குழாய் சென்னையை இணைக்கு திட்டத்திற்கு இந்தாண்டு 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்