பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா! ஒரு கிராமம் ஒரு மர அரச மரம் திட்டம் நாளை அறிமுகம்!

பேரூர் சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டம் தொடங்கப்பட உள்ளது. 

Perur Adigalar Centenary Celebration! One Village One Tree Royal Tree Scheme to be launched tomorrow tvk

கோவை மாவட்டம் பேரூர் அடிகளார் என போற்றப்படும் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கிராமம் ஒரு அரச மரம் எனும் மாபெரும் திட்டத்தை காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நாளை பேரூர் ஆதின வளாகத்தில் துவங்கப்பட உள்ளது. 

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அப்போது பேசிய  ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன்:-  பேரூர் ஆதனத்தின் 24-வது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தை நடவு செய்வதை இலக்காக கொண்டு ஒரு கிராமம் ஒரு அரச மரம் எனும் மாபெரும் திட்டம் நாளை முதல் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதல் அரச மரக்கன்றை நாளை பேரூர் ஆதீனம் வளாகத்தில் நடவு செய்ய உள்ளனர்.

Latest Videos

அதனை தொடர்ந்து ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலின் படி நொய்யல் ஆறு அறக்கட்டளை, கோயம்புத்தூர் கட்டிட கட்டுமான மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓசூர் புவியின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து முதல் கட்டமாக கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நடவு செய்ய உள்ளனர்.

vuukle one pixel image
click me!