வேலை வெட்டி இல்லாத பசங்க! TVK தொண்டர்களை பார்த்து சீமான் இப்படி சொல்லிட்டாரே!

Published : Aug 21, 2025, 03:23 PM IST
seeman and thalapathy vijay

சுருக்கம்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தெரு நாய்கள் கட்டுப்பாடு, ஆன்லைன் சூதாட்ட தடை, மது ஒழிப்பு குறித்து பேசினார். 

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்திக்கையில்: தெரு நாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும், அதனால் பிளேக் நோய் வரும் அதனை கட்டுப்படுத்த போராட வேண்டும். தெரு நாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆர்வலராக இருந்தாலும் தமக்கு பாதிப்பு ஏற்படும் போது பயம் வந்துவிடும் அதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மதுவை குடித்து தான் ஒழிக்க முடியும்

தமிழக வெற்றி கழக மாநாடு நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான். முதல் நாளே மாநாட்டிற்கு சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதனை வரவேற்கிறேன். தெருவுக்குத் தெரு மது கடைகளை திறந்து வைத்துவிட்டு போதையை ஒழிப்பேன் என கூறுவது எப்படி. அவர்கள் பாஷையில் குடிசை ஒழிப்பு என கூறி குடிசையை கொளுத்தி விட்டு குடிசை ஒழிப்பு என்பார்கள். அதேபோல மது ஒழிப்பு எனக்கூறி மதுவை குடித்து தான் ஒழிக்க முடியும் என தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர்

துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டும் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திமுக எம்.பி.க்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என எச்.ராஜா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான் சமீபத்தில் கனிமொழி எம்.பி. கூறும்போது நாங்கள் பாஜக கொள்கைகளில் மாறுபடுகிறோ. அவர்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். நீங்கள் என்ன செய்தீர்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து வெளிநாட்டிற்கு பிரதிநிதியாக சென்று பேசிய போது ஏன் இந்த கொள்கை தெரியவில்லை.

கலவரத்தை ஆதரித்து பேசினீர்கள்

தமிழுக்கும் தமிழருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்துள்ளது. திராவிடம் என்பது சமஸ்கிருத சொல் மாடல் என்பது ஆங்கில சொல் பாராளுமன்றத்தில் இல்லை என ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை. வாஜ்பாய் ஆட்சியில் அந்த கொள்கை ஏற்புடையதாக இருந்தது. ஆனால் இப்போது ஏற்கவில்லையா? குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசினீர்கள் மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பேசினீர்கள். அப்போது கூட்டணியில் இருந்தீர்கள் தற்போது கூட்டணியில் இல்லை அதனால் தற்போது எரிக்கவில்லை என்கிறீர்கள் என தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Madurai Meenakshi Temple: தேவாரப் பாடல்கள் முழங்க... 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!