#Breaking | Tamilnadu Rain | கனமழை எதிரொலி… 7 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!

By Narendran SFirst Published Nov 25, 2021, 7:00 PM IST
Highlights

#TamilnaduRain | கனமழை காரணமாக நாளை 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

கனமழை காரணமாக நாளை 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் இராமநாதபுரம், திருநெல்வேளி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  காற்றழுத்த உந்துதல் குறைவாக இருந்ததால் அழுத்தம் ஏற்படாமல் தாழ்வு பகுதி உருவாகவில்லை என்றும் காற்று சுழற்சி காரணமாக மட்டுமே தற்போது கனமழை பெய்து வருவதாகவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், இராமநாதபுரம், திருநெல்வேளி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குமரி கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. நவம்பர் 29 ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 08:30 மணி முதல் தற்போது வரை 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடிக்கு விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்ச் அலர்ட் ரெட் அலர்ட் ஆக மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நெல்லை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையை அடுத்து புதுகோட்டை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இராமநாதபுரம், திருவாரூர், மதுரை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!