கர்பிணி மனைவி.. 6 நாட்கள்.. வீட்டுக்கு கூட செல்லாமல் தொடர் மீட்பு பணி - 300 பேரை காப்பாற்றிய ரியல் ஹீரோ சதிஷ்!

By Ansgar R  |  First Published Dec 9, 2023, 10:57 AM IST

Chennai Floods : வரலாறு காணாத அளவில் பெய்த மழையும், மிக்ஜாம் புயலும் சென்னையை பெரிய அளவில் புரட்டிப் போட்டுள்ளது. புயல் கடந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கூட இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை.


இந்த இக்கட்டான சூழலில் அரசுடன் இணைந்து பல்வேறு பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகர் பாலா தன்னிடமிருந்த 90 சதவீதமான பணத்தை எடுத்து, வீட்டிற்கு ஆயிரம் என்ற வீதம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். 

சின்னத்திரை நடிகர்களும், வெள்ளித்திரை நடிகர்களும் தொடர்ச்சியாக தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இந்த சூழலில் தங்களுடைய குடும்பத்தையும் மறந்து பொதுமக்களின் நலனை கருதி செயல்படும் பல நபர்கள் ரியல் லைஃப் ஹீரோக்களாக மாறி வருகின்றனர் என்று கூறினால் அது மிகையல்ல.

Latest Videos

undefined

உன் கடையால தான்டா எங்க பொண்ணு ஓடி போச்சி; மாற்று திறனாளியின் டீக்கடையை சூறையாடிய மர்ம நபர்கள் 

அந்த வகையில் தமிழ்நாட்டின் TNDRF எனப்படும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை (Tamil Nadu Disaster Response Force) துறையில் பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்கின்ற 34 வயது வாலிபர் இப்பொழுது நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறி இருக்கிறார். கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல் கடந்த ஆறு நாட்களாக தனது கர்ப்பிணி மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, மக்களுக்கு பணி செய்ய களத்தில் இறங்கியுள்ளார் அவர்.  

கடந்த டிசம்பர் 3ம் தேதி ரெட்டேரி ஏரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு முதியவர்களை காப்பாற்றியவர் சதீஷ்குமார், இந்த 6 நாட்களில் 300க்கும் மேற்பட்ட நபர்களை அவர் மாதவரம், புழல் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் இருந்து காப்பாற்றியுள்ளார். இரவு நேரங்களிலும் வெகு சில மணி நேரங்கள் மட்டுமே உறங்கிவிட்டு படகுகள் மூலம் மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறார் அவர். 

வானிலை மையத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் வெள்ள பாதிப்பு.. திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிசாமி.!

இந்த ஆறு நாட்களாக கிடைக்கும் இடங்களில் படுத்து உறங்கிக் கொண்டு, கிடைப்பதை உண்டு கொண்டு ஒரு நாளைக்கு 18 முதல் 19 மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் சதீஷ்குமார். உண்மையில் சதீஷ்குமார் போன்ற பலர் சென்னையின் ரியல் லைஃப் ஹீரோக்களாக மாறி உள்ளனர். கடும் வெள்ளம் வந்தாலும் சென்னை மீண்டு நிற்கும் என்பதற்கு இது ஒரு சாட்சி. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!