மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகிறார்.
மிக்ஜாம் புயல் காரனமாக கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. 42 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடைவிடாத தொடர் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. சென்னை மற்றும் புறகர் பகுதிகள் முழுவதுமே தண்ணீரில் தத்தளித்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மின்சாரம், தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டது, போக்குவரத்து சேவையும் முடங்கியது.
அத்தியாவசிய பொருட்கள், உணவு, தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிய தொடங்கியதால் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் புறநகர் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடிந்தபாடில்லை. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், தாம்பரம், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனிடையே வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7-ம் தேதி சென்னை வந்திருந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரதராஜபுரம், முடிச்சூர், சென்னை மாவட்டத்தின் மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
ரூ.4,000 கோடி அல்ல, ரூ.5,166 கோடி: இதுதான் கணக்கு - கே.என்.நேரு விளக்கம்!
முன்னதாக புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.