அவரவர் வாய்ப்பை தேடி ராஜினாமா செய்யும் போது அதை தவிர்க்க முடியாது ! சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி

அவரவர் வாய்ப்பை தேடி ராஜினாமா செய்யும் போது அதை தவிர்க்க முடியாது ! சசிகாந்த் செந்தில் எம்பி பேட்டி

Published : Jul 19, 2026, 01:03 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுப்புற கிராமங்களில் பொதுமக்களின் குறைகளை காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கேட்டறியும் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. ஆசானபுதூர் கிராமத்தில் மக்களை சந்தித்தார். அப்போது பல ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் சுகாதாரமான குடிநீர், 100நாள் வேலை வாய்ப்பை மீண்டும் ஏற்படுத்தி தர வேண்டும் என மனு அளித்தனர். அப்ப்போது உடனடியாக மாவட்ட ஆட்சியரை செல்போனில் தொடர்பு கொண்ட எம்பி குறிப்பிட்ட வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டு கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி சசிகாந்த் செந்தில் மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பிரச்சினைகளை தீர்க்கப்டுவதில்லை என்ற கேள்விக்கு, ஏற்கனவே சாலையை சீரமைத்து கொடுத்ததாகவும், தற்போது பேருந்து கோரிக்கையும் செயல்படுத்தப்படும் என்றார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குதிரை பேர அரசியல் குறித்த கேள்விக்கு இன்றிய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் அரசியலில் மாற்றங்கள் வந்துள்ளதாகவும், யாரும் யாரையும் கட்டாயப்படுத்தினால் தவறு எனவும், அவரவர் வாய்ப்பை தேடி ராஜினாமா செய்து செல்லும் போது அதை தவிர்க்க முடியாது எனவும், கட்டாயப்படுத்தாத போது அதை தவறு என கூற முடியாது என்றார். காங்கிரஸ் கட்சி அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் கட்சி எனவும், எங்களை சீண்டினால் பதிலடி கொடுப்போம் என்ற மாணிக்கம் தாகூரின் கருத்து நியாயமானது என்றார். பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் யார் யாருடன் உள்ளார்கள் என்பது தெரிந்து விடும் என்றார். டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட சோனம் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு நீட் தொடர்பான போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே காங்கிரஸ் ஆதரவு அளித்து வருவதாகவும், பாஜகவின் போக்கை மக்கள் பார்த்திட வேண்டும் என்றார். மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை திட்டத்தை கொண்டு வர உள்ளதால் அதனை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், எந்த மாநில அரசும், மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இருக்காது எனவும், அப்படி யாரேனும் விட்டு கொடுப்பதாக இருந்தால், அவர்களை பற்றி கூற ஏதும் இல்லை எனவும், இதனை எதிர்த்து வன்மையாக போராட வேண்டும் எனவும் அரசுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டம் கூடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

01:36நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!