விஜய் ஆறு மாத காலம் களத்தில் இருந்த பிறகு என்ன செய்யப்போகிறார், கொள்கை ரீதியாக என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழா
திமுக- அதிமுக மட்டுமே நமக்கு போட்டி என நினைத்து கொண்டிருந்த பாஜகவிற்கு நடிகர் விஜய் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வகையில் அரசியலில் களம் இறங்கியுள்ளார் விஜய். எனவே விஜய்க்கு எதிராக அரசியல் செய்ய பாஜக தலைமை ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடிகர் சரத்குமார் மற்றும் குஷ்பு ஒன்றாக கலந்து கொண்டனர்.
இதனையடுத்து தேசிய கொடியை நடிகர் சரத்குமார் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், 2026-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு சிறந்த ஆட்சியை அமைக்க பாடுபட சபதம் ஏற்போம் என்ற செய்தியை இந்த குடியரசு தின நாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என கூறினார்.
விஜய் என்ன செய்ய போகிறார்.?
தொடர்ந்து பேசிய அவர், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடிய நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசும், அண்ணாமலையும்தான் காரணம் என கூறினார். நடிகர் விஜய் அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், விஜய் ஆறு மாத காலம் அவர் களத்தில் இருந்த பிறகு என்ன செய்யப்போகிறார். கொள்கை ரீதியாக என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க வேண்டும். தமிழகத்தை வேறொரு பாதையில் எப்படி எடுத்து செல்ல போகிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் ஆளுநர் இருக்க வேண்டாம் என சொன்னார். ஆனால் ஆளுநரையே எதற்கு நேரில் சென்று சந்தித்தார் என தெரியவில்லை என கூறினார்.
டங்ஸ்டன் ரத்து- மத்திய அரசு தான் காரணம்
இதனையடுத்து பேசிய நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நானும், சரத்குமார் அவர்களும் கட்சி அலுவலகம் வரவில்லை. தேர்தலில் பரப்புரையில் தனித்தனியாக ஈடுபட்டு இருந்தோம். பிரதமர் சேலம் வந்த போது ஒரே மேடையில் இருந்தோம். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அந்த அங்கீகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்படுதற்கு மத்திய அரசுதான் காரணம் ஆனால் முதலமைச்சர் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள செல்வது அவருக்கு சிறிய சந்தோசம் செல்லட்டும் என்றார்.